கிறிஸ்துமஸ் சிந்தனை 4:நல்ல நல்ல நிலம் பார்த்து...!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2013 12:12
இயேசுநாதர், மனிதர்களின் மனங்களை விதைகளோடு ஒப்பிட்டு பேசினார். விளைநிலத்தில் விவசாயி தூவிய விதைகளில் சில, வழியோரத்தில் விழுந்தன. அவற்றைப் பறவைகள் கொத்தி தின்றன. வேறு சில விதைகள் பாறையிலும், முள் செடிகளின் மத்தியிலும் விழுந்தன. முளைத்த அந்த விதைகள், இயற்கைச் சூழலால் பட்டுப் போயின. மீதமுள்ள விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை நல்ல விளைச்சலைக் கொடுத்தன. மனிதர்களின் மனங்கள், விதைகளைப் போன்று விளைச்சலை அளிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதை இயேசு, சீடர்களிடம் தெளிவுபடுத்தியபோது அதை கேட்ட அவர்கள் வியந்தனர். வழியோரம் விழுந்த விதைகளைப்போன்ற மனம் படைத்தவர்கள், இறைவார்த்தைகளை கேட்டாலும் அதன் உட்பொருளை உணர்ந்து கொள்ளமாட்டார்கள். தீயவர்களிடம் சிக்கி அழிந்து போவார்கள். பாறையிலும், முட்செடிகளின் மத்தியிலும் விழுந்த விதைகளைப் போன்றவர்கள், இறைவார்த்தைகளை கேட்டு இன்புறுவார்கள். அதன்படி வாழ உறுதிகொள்வார்கள். ஆனால், எதிர்பாராத துன்பங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் தடுமாறுவார்கள். நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போன்றவர்கள், இறைவார்த்தைகளின் படி தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்வார்கள். தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்வார்கள். நீங்கள் நல்ல நிலத்தில் விழுந்த விதை போல் வாழுங்கள்.