பதிவு செய்த நாள்
19
டிச
2013
10:12
பள்ளிப்பட்டு: அறங்காவலர் மறைவுக்கு பின் பூட்டப்பட்ட, வரதநாராயணன் கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.பள்ளிப்பட்டு, வரதநாராயணன் கோவில் அறங்காவலராக இருந்த ராமகிருஷ்ணய்யா, கடந்த சனிக்கிழமை இறந்தார். இதை தொடர்ந்து, கோவில் பூட்டப்பட்டது. இதையடுத்து, பக்தர்களின் போராட்டத்திற்கு பின், நடை திறக்கப்பட்டது.இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின், வேலூர் மாவட்ட இணை ஆணையர் செந்தில்வேலவன், நேற்று, கோவில் பரம்பரை அறங்காவலர்களிடம் இருந்து, கோவில் நிர்வாகத்தை, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்தார்.அதற்கான, ஆணையை, பரம்பரை அறங்காவலரின் வாரிசுதாரர்களிடம் வழங்கினார். தொடர்ந்து, கோவில் சொத்து மற்றும் ஆபரணங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.தற்காலிக தக்காராக, இந்து சமய அறநிலையத் துறையின் திருத்தணி ஆய்வாளர் பார்த்தசாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.