Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அறநிலையத் துறை வசமானது வரதநாராயணன் ... பிறவி மருந்தீஸர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நிறைவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2013
10:12

கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடந்த மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு, ஆருத்ரா மகா அபிஷேகம், சந்தனம் சாத்துதல் நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு கூத்த பெருமாள் வீதியுலா, மாலையில் பஞ்மூர்த்திகளுக்கு 21 வகை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இரவு மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்த பின், வெள்ளி ரிஷிப வாகனத்தில், பஞ்சமூர்த்தி புறப்பாடுடன் விழா நிறைவடைந்தது. பரம்பரை தர்மகர்த்தா ராஜேஸ்வரி நாச்சியார், ராமேஸ்வரம் கோயில் தக்கார் குமரன் சேதுபதி, ராமநாதபுரம் கனகமணி மருத்துவமனை டாக்டர்கள் அரவிந்த ராஜ், பால்ராஜ், மதுரம், கனகப்பிரியா, திருப்புல்லாணி அ.தி.மு.க.,ஒன்றிய செயலாளர் முனியாண்டி, ஒன்றியக்குழு தலைவர் ராஜேஸ்வரி, சிட்டி யூனியன் வங்கி மேலாளர்கள் பிரபாகரன் (ராமநாதபுரம்), சுப்பிரமணியன் (கீழக்கரை) மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரஸ்வதி, ஒன்றிய துணை தலைவர் ஆலங்குளம் குருசாமி, உத்தரகோசமங்கை ஊராட்சி தலைவர் நாகராஜன், அ.தி.மு.க., ஊராட்சி செயலாளர்கள் பாக்கியநாதன் (புல்லந்தை), பழனிமுருகன் (உத்தரகோசமங்கை), ஊராட்சி துணை தலைவர் மங்களேஸ்வரி, செயலர் கல்யாண சுந்தரம், சிற்பக்கலை வேல்முருகன், கான்ட்ராக்டர்கள் உத்தண்டி, எம்.நடராஜன், விஸ்வா கேபிள் சுப்பிரமணிய ஐயர், சுரேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திவான் மகேந்திரன், நிர்வாக அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் ஸ்ரீதர் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்தனர். ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு மாணிக்கவாசகர் மரக்கேடயத்தில் புறப்பாடாகி, சபாபதி சுவாமி சந்நதி முன் எழுந்தருளினார். பின், மஞ்சள், பால், பன்னீர் உள்ளிட்ட மகா அபிஷேகம் நடந்தது. சுபாபதி சுவாமி தங்க கவசத்துடன் அருள்பாலித்தார். காலை 10 மணிக்கு சபாபதி சுவாமி மரக் கேடயத்தில் எழுந்தருளி, ரத வீதிகளில் வீதி உலா வந்தார். இரவு 7 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், ஊஞ்சல் வைபவம், பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது.

பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் டிச., 9ம் தேதி மாணிக்கவாசகருக்கு காப்புகட்டுடன் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, உற்சவர் பச்சை சாத்தி புறப்பாடுடன், ஆனந்ததாண்டவம் ஆடினார். தொடர்ந்து மூலவர் சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானுக்கு, டிச., 18 அதிகாலை 4 மணிக்கு, அருணோதயத்தில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், நடராஜமூர்த்திக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar