பதிவு செய்த நாள்
19
டிச
2013
10:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆருத்ரா தரிசன விழா டிச., 9ல் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டும் நிழச்சியுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை மூலவர் நடராஜர் வியாத்ர பாதர் முனிவர், காரைக்கால் அம்மையார், சிவகாசி அம்பாள், பதஞ்சலி முனிவருக்கு தைல காப்பு சாத்துப்படி செய்யப்பட்டு, உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நடராஜர், மாணிக்கவாசகர் சிம்மாசனத்திலும், சிவகாமி அம்மன வெள்ளி அம்பாரியிலும் பூச்சப்பரங்களில் வலம் வந்தனர். சோழவந்தான்:தென்கரை அகிலாண்டேஸ்வரியம்மன், திருமூல நாதர்சுவாமி கோயிலில் ஆரூத்ரா தரிசனம் நடந்தது. அம்மன்,சுவாமி மற்றும் பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின், நடராஜர், சிவகாமியம்மன் சப்பரத்தில் எழுந்தருள, மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் வீதி உலா, வழிநெடுக பக்தர்கள் திருபாசுரம், திருவாசகம் பாடி சுவாமியை தரிசித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகரன், கோயில் நிர்வாக அதிகாரி சுமதி, தலைமை கணக்கர் வெங்கடேசன், கோயில் ஊழியர்கள் கிருஷ்ணன், நாகராஜன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.