பதிவு செய்த நாள்
19
டிச
2013
10:12
மண்ணடி: ஆருத்ரா தரிசனத்தை யொட்டி, மண்ணடியில் ஒன்பது கோவில்களை சேர்ந்த உற்சவ நடராஜர்கள் ஒரே இடத்தில் கூடினர்.சிவனடியார் சேவா சங்கம் சார்பில், ஆண்டுதோறும் மண்ணடி, தம்பு செட்டி தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு சந்திப்பில், நவநடராஜர் சந்திப்பு நடந்து வருகிறது.ஆறாம் ஆண்டாக நேற்று காலை 11:30 மணியளவில் நடந்த நிகழ்ச்சியில், மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவில், கச்சாலீஸ்வரர் கோவில், காளிகாம்பாள் கோவில், மூக்கர் நல்லமுத்து பிரசன்ன விநாயகர் கோவில், மண்ணடி செல்வவிநாயகர் கோவில், நைனியப்பன் தெருவில் உள்ள முத்துகுமாரசுவாமி கோவில், செங்கழுநீர் பிள்ளையார் கோவில், சிதம்பரேஸ்வரர் கோவில், சண்முக செல்வவிநாயகர் கோவில் ஆகிய ஒன்பது கோவில்களில் இருந்தும் உற்சவ நடராஜர்கள் மலர் அலங்காரத்தில் ஒரே இடத்தில் கூடினர். அவர்களுக்குரிய மரியாதை அளித்து, 20 பேர் ஒன்றாக கூடி, சிவவாத்தியம் முழங்க, நவநடராஜர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.