நெட்டப்பாக்கம்: நல்லாத்தூர் சுவர்ணபுரீரஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. ஏம்பலம் அடுத்த நல்லாத்தூரில் திரிபுரசுந்தரி சமேத சுவர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அமைந்துள்ள நடராஜருக்கு நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. அதையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு ஊடல் உற்சவம், திருவெம்பாவை முற்றோதல் நடந்தது. தொடர்ந்து, சுவாமி புறப்பாடு, மகா தீபாரதனை, பிரசாத வினியோகம் நடந்தது.திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.