சிவகங்கை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் திருவாதிரை விழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு உற்சவர் சிவகாமி சமேத நடராஜர் சுவாமிக்கு 32 வகை அபிஷேகங்கள் நடத்தி கவசம் அணிவிக்கப்பட்டு நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.