குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும், முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழும் புகழ்பெற்றவை. இது தவிர, பகழிக்கூத்தரால் எழுதப்பட்ட திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையால் எழுதப்பட்ட சேக்கிழார் பிள்ளைத்தமிழும் சிறப்பானவை. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அப்போது அம்மனே குழந்தையாக வந்து திருமலைநாயக்கரின் மடியில் அமர்ந்து பாடலைக் கேட்டு ரசித்ததோடு, முத்துமாலை ஒன்றைப் பரிசாகக் கொடுத்து மறைந்ததாகவும் சொல்லுவர்.