பதிவு செய்த நாள்
21
டிச
2013
10:12
காஞ்சிபுரம்: மேல்மருவத்தூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையோரத்திலிருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், விழுப்புரம் மாவட்டம் சேஷந்தனூர் சிவன் கோயிலில் திருடப்பட்டவை என்பது விசாரணையில் தெரிய வந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் புதைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகளை, கடந்த, 18ம் தேதி காலை போலீசார் மீட்டனர். விநாயகர், வள்ளி, தெய்வானை உட்பட, ஐந்து சிலைகளும், எஸ்.பி., விஜயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஸ்ரீபெரும்புத்தூர், திருக்கழுக்குன்றம் கோயில், விழுப்புரம் மாவட்டம், சேஷாந்தனூர் கிராமத்தில் உள்ள, அழகேஸ்வரர் கோயில் ஆகியவற்றுக்கு உரியவையா என, விசாரிக்கப்பட்டதில், அழகேஸ்வரர் கோயிலுக்கு உரியவை என்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, சிலைகளை விழுப்புரம் மாவட்ட போலீசாரிடம், காஞ்சிபுரம் போலீசார் ஒப்படைத்தனர்.