பதிவு செய்த நாள்
21
டிச
2013
10:12
ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் ஜனவரி 11ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நடக்கவுள்ளது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.ஜன.,10ல் மாலை, 5 முதல் இரவு, 10 மணி வரை நாச்சியார் திருக்கோலம் மற்றும் மோகினி அலங்கார காட்சி நடக்கிறது. 11ம் தேதி அதிகாலை, 2.45 மணிக்கு அரங்கநாதருக்கு திருமஞ்சனமும், மஹா தீபாராதனையும் நடக்கிறது. ஜன., 11ல் அதிகாலை, 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பும், சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. ஜன., 1 முதல், 10ம் தேதி வரை பகல் பத்து உற்சவமும், 11ம் தேதி முதல், 20 வரை சுவாமிக்கு இராப்பத்து உற்சவமும், முத்தங்கி சேவையும் நடக்கிறது. 20ம் தேதி இரவு, 7.30 மணிக்கு நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது.செயல் அலுவலர் விமலா, தக்கர் மற்றும் உதவி ஆணையர் சபர்மதி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.