குளித்தலை: அம்பாள் கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் மாவட்டம், ஆர்.டி. மலையில் விராச்சிலை ஈஸ்வரர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் நடராஜருக்கு, 64 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் ஸ்வாமி வீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிவ பக்தர்கள், அப்பர் உழவார பணி தொண்டர்கள் என, திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை, கந்த சுப்ரமணிய சிவாச்சாரியார், வேதரத்தினம் குருக்கள் செய்திருந்தனர்.