பேய்க்குளம் : பேய்க்குளம் அருகே கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோயிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு 1008 நெய்விளக்கு பூஜை நடந்தது. நெய்விளக்கு பூஜைக்கு சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் கயல்விழி அழகுதுரை தலைமை வகித்தனர். முதல் நெய்விளக்கை கவுரி தியாகராஜன் ஏற்றிவைத்தார். நடராஜரின் பஞ்ச விக்ரஹ ஸ்தலங்களை செப்பறை, சிதம்பரம், கரிசூழ்ந்த மங்கலம், கருவேலன்குளம், கட்டாரிமங்கலம் ஆகியவற்றில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்த ஒரே ஸ்தலம் கட்டாரிமங்கலம். ஆதலால் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பெண்கள் நெய்விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா நடராஜன் தலைமையில், அழகியகூத்தர் அறக் கட்டளை தலைவர் கணேசன், செயலாளர் அய்யம் பெருமாள், பொருளாளர் ஆழ்வை யூனியன் கவுன்சிலர் லெட்சுமண பெருமாள், மாணிக்கராஜா, கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.