செங்கோட்டை : செங்கோட்டை அரசநங்கை முப்புடாதி அம்மன் கோயிலில் டிச 21ம் தேதி பூக்குழி திருவிழா நடக்கிறது. செங்கோட்டை பிரானூர் பார்டரில் உள்ள அரசநங்கை முப்புடாதி அம்மன் கோயிலில் 4ம் ஆண்டு பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கடந்த 14ம்தேதி காப்பு கட்டுதல் வைபவம் நடந்தது. இதனை தொடர்ந்து டிச 21ம் தேதி மதியம் 12 மணியளவில் நையாண்டிமேளம் முழங்க குற்றால தீர்த்தம், பால்குடம் எடுத்து வருதல், முப்புடாதி அம்மனுக்கு அபிஷேகம், ஐஸ்வர்ய அலங்கார பூஜை, மஹா தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணியளவில் ஐயப்ப பக்தர்கள் பஜனை நடக்கிறது. இரவு 7 மணியளவில் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணியளவில் மங்கள வாத்தியங்கள் முழங்க முப்புடாதி அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது.