சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளம் தூர்வாரி சுற்றுச்சுவர் கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2013 11:12
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் பழமை வாய்ந்த சோமேஸ்வரர் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கோவிலில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. தற்போது அந்த குளம் பராமரிக்கப்படாமல் பாசி படர்ந்து அசுத்தமாகி வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லும் நீரோடையில் ஆக் கிரமிப்பு இருந்து வருவதால், கழிவுநீர் அனைத்தும் தெப்பக் குளத்திலேயே விழுந்து விடுகிறது.இதனால் அந்த குளத்தை தூர்வார பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின் றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. சீரமைக்க வேண்டும்இதற்கிடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தெப்பக்குளம் பகுதியில் பூங்கா அமைக்கப்பட உள்ள தாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அந்த பணிகளும் தொடங்கப்படாமல் இருந்து வருகிறது.இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அந்த குளத்தில் கார் பட்டறை உரிமையாளர் ஒருவர் தவறி விழுந்து இறந்தார். எனவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உடனடியாக கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் எனவும், கோவில் தெப்பக்குளத்தை சுற்றி உடனடியாக சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.