சின்னசேலம்: சின்னசேலம் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந் ஜெயந்தி பூஜை நடக்கிறது. சின்னசேலம் ஆஞ்சநேயர் கோவிலில் 82ம் ஆண்டு அனுமந் ஜெயந்தி பூஜை, ஜனவரி 1ம் தேதி நடக்கிறது. அன்று காலை முதல் மாலை வரை சுவாமிக்கு 17 வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடக்கிறது. மறுநாள் காலை உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. அலங்காரம் மற்றும் பூஜைகளை சீதாராமசுப்பையர் செய்து வைக்கிறார்.