செஞ்சி புனித மிக்கேல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2013 11:12
செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் புனித மிக்கேல் தேவாலயத்தில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கேரல்ஸ் (பஜனை) ஊர்வலம் நடந்தது. வேனில் குடில் அமைத்து மாதா, சூசையப்பர் வேடத் தில் குழந்தைகளை அமர்த்தி குழந்தை ஏசு பிறப்பை சித்தரித்திருந்தனர். சிறுவர், சிறுமியர் கிறிஸ்துமஸ் பிறப்பு பாடல் களை பாடினர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். ஊர்வலம் செஞ்சி தேசூர்பாட்டை, திருவண்ணாமலை ரோடு, காந்தி பஜார், சிங்கவரம் சாலை மற்றும் சிறுகடம்பூர் வழியாக நடந்தது. பங்கு தந்தை பிச்சை முத்து அடிகளார், பள்ளி முதல்வர் தந்தை எட்வர்ட் ஆனந்த், பங்கு பேரவை தலைவர் செல்வராஜ் மற்றும் பங்கு பேரவையினர் கலந்து கொண்டனர். இதே போன்ற ஊர்வலம் சிறு நணாம்பூண்டி, கோணை, பொன்பத்தி, பெரும்புகை கிராமங்களில் நடந்தது.