மதுரை: மதுரை ஐராவதநல்லூர் அந்தோணியார் ஆலயத்தில், கிறிஸ்துமஸ் திருப்பலி, நேற்றிரவு நடந்தது. ஆர்ச் பிஷப் பீட்டர் பெர்ணான்டோ தலைமை வகித்தார். பாதிரியார்கள் ஜான் திரவியம், ஜோசப், பங்கு பேரவை உறுப்பினர்கள் ஜேம்ஸ், லூர்துராஜ் ஏற்பாடுகளை செய்தனர். பெத்தலகேம் மாதிரி, குடில் அலங்காரங்களை செய்திருந்தனர். கோலப்போட்டி, குடில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.