சேலம்: ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியில் அன்னை சாரதாதேவியின் 161வது பிறந்தநாள் விழாவையொட்டி, வண்ண வண்ண கோலப்பொடிகளால் பிரம்மாண்டமான மகிஷாசுரமர்த்தினி உருவம் ரங்கோலியாக தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பெற்றோர் பரவசத்துடன் பார்த்து செல்கின்றனர். அன்னை சாரதாதேவி ஜெயந்தி விழாவையொட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் இவர்களுடன் பன்னீரு ஆழ்வார்களின் வாழ்க்கை குறித்த கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.