சிவகங்கை: சிவகங்கையில்,ஐயப்பனுக்கு மண்டல அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவகங்கை, விஸ்வநாதசுவாமி ஆலய வளாகத்தில் உள்ள ஐயப்பனுக்கு, மண்டல அபிஷேக பூஜை நேற்று நடந்தது. ஐயப்ப பக்தர்கள் அமைத்திருந்த "தென்னை குருத்து ஓலை தேரில் ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். தொடர்ந்து, பல்வேறு அபிஷேக ஆராதனை நடந்தது. பூஜையை முன்னிட்டு, ராதா குருசாமி தலைமையில், சிறப்பு பூஜை நடந்தது. ஐயப்ப பக்தர்கள் சபை சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நேற்று இரவு, 7 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில், ஐயப்பன், கோயில் வளாகத்தில் உலா வந்தார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.