அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2013 12:12
தோப்புத்துறை: அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிற 1ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் வரும் 1ம் தேதி முதல் 10ம்தேதி வரை பகல் பத்து உற்சவம் நடைபெற உள்ளது. 11ம் தேதி பரமபதவாசல் திறந்து சேவை நடைபெறுகிறது. 12ம் தேதி முதல் 22ம் தேதி வரை இரவு பத்து உற்சவம் நடைபெறுகிறது.