கும்மிடிப்பூண்டி: பஞ்சேஷ்டி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், இன்று சோமவார பிரதோஷ விழா, நடைபெற உள்ளது. பிரதோஷ மகிமை கொண்ட பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள், சோழவரம் அடுத்த, பஞ்சேஷ்டி ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவிலும் ஒன்று. வரும், திங்கள்கிழமை (சோமவாரம்), சிவனுக்கு உகந்த நாள் என்பதால், சோமவார பிரதோஷம் சிறப்பானது. இன்று, இந்த ஆண்டின் கடைசி சோமவார பிரதோஷம் என்பதால், ஏராளமான பக்தர்கள் பஞ்சேஷ்டி கோவிலின் பிரதோஷ விழாவில் கலந்து கொள்வர். இதேபோன்று, கவரைப்பேட்டை அருகே, அரியதுரை வரமூர்த்தீஸ்வரர், புதுகும்மிடிப்பூண்டி சந்திரசேகரேஸ்வரர் கோவில்களில் சோமவார பிரதோஷ விழா நடைபெற உள்ளது.