கடம்பத்துார்: பாகசாலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், வரும், ஜனவரி 1ம் தேதி, ஆங்கில புத்தாண்டு பெருவிழா நடைபெற உள்ளது. திருவாலங்காடு ஒன்றியத்துக்குட் பட்டது, பாகசாலை கிராமம். இங்கு, பாலசுப்ரமணிய கோவில் மற்றும் திருவுடைநாயகி உடனுறை, திருமூலநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த ஆண்டு, ஆங்கிலப் புத்தாண்டு பெருவிழாவில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 108 சங்குஸ்தாபனம், திருவிளக்கு பூஜை மற்றும் விசேஷ தீபாராதனை நடைபெறும்.