விழுப்புரம்: விழுப்புரம் திருநகரில் உள்ள மகாலஷ்மி, லஷ்மி குபேரன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடக்கிறது. விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி ரோடு திருநகரில் உள்ள மகாலஷ்மி, லஷ்மி குபேரன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு விழாவை முன்னிட்டு நேற்று இரவு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர், 12:01 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சீனிவாச பெருமாள் சன்னதி புறப்பாடு நடந்தது. பின்னர், ஊஞ்சல் உற்சவத்தில் சுவாமி அருள் பாலித்தார். கோவிந்தாபுரம் வெங்கடேச பாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. இன்று அதிகாலை 5 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை தாயார் சமேத சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.