புதுக்கோட்டை: நாடு முழுவதும் இன்று புத்தாண்டு தின நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து திருக்கோவில்களிலும் இன்று அதிகாலை முதலே அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சந்தணக்காப்பு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது.புதுக்கோட்டை தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நள்ளிரவு முதலே புத்தாண்டு தின நிகழ்ச்சிகள் துவங்கியது. சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிக்கு பின் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒவ்வொருவரும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.