மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் தாலுகா சா.அய்யம்பாளையம் சபரிமலை யாத்திரை குழுவினரின், 19ம் ஆண்டு தீமிதி விழா ஜனவரி ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. மண்ணச்சநல்லூர் தாலுகா சா.அய்யம்பாளையத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் மாலையணிந்து விரதமிருந்து சபரிமலை சென்று வருகின்றனர். மலைக்கு செல்லும் முன்னர் மாலையணிந்தவர்களுக்கு இருமுடி கட்டி அருகிலுள்ள கோவிலுக்கு சென்ற பின்னர், ஜனவரி ஐந்தாம் தேதி மாலை, 4.15 மணியளவில் சா.அய்யம்பாளையம் கீழுரில் உள்ள மாரியம்மன் கோவில் முன் குருசாமி தர்மலிங்கம் தலைமையில், 60 பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீ மிதிக்கின்றனர். அதன் பின்னர் அன்னதானம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.