பதிவு செய்த நாள்
02
ஜன
2014
01:01
நாமக்கல்: ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு, நேற்று அதிகாலை, பால், பஞ்சாமிர்தம், தயிர், திருமஞ்சனம், சந்தனம் மற்றும் புஷ்ப அபிஷேகம் செய்யப்பட்டது. ஆஞ்சநேயர் ஸ்வாமி, வெண்ணக்காப்பில் ராஜ அலங்காரத்திலும், நேற்று அதிகாலை, வடமாலை மற்றும் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆஞ்சநேயர் ஸ்வாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.