புதுவை: புத்தாண்டையொட்டி மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் நடை காலை 4 மணிக்கு திறக்கப்பட்டு விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. லட்டு பிரசாதம் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து மணக்குள விநாயகரை தரிசனம் செய்தனர்.