எண்ணுார்: எர்ணாவூரில், தேவாலயத்தில் இருந்த உண்டியலை உடைத்த மர்ம நபர்கள், அதிலிருந்த பணம் மற்றும் நகைகளை திருடி சென்றுள்ளனர். எர்ணாவூர், காமராஜர் நகரில், துாய இருதய ஆண்டவர் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் முன், பக்தர்கள் காணிக்கை செலுத்த பெரிய உண்டியல் ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை, வழக்கம்போல், தேவாலயத்தை திறக்க பாதிரியார் வந்தார். அப்போது. உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம், நகைகள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து எண்ணுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.