மதுரை: மதுரை கூடலழகர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் 11ம் தேதி இரவு 7.15 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இங்கு திரு அத்யயனத் திருவிழா கடந்த டிசம்பர் 31ல் துவங்கியது. வரும் 11ம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல்நாளில் பரமபதவாசல் திறக்கப்படும். இதைத் தொடர்ந்து ௧௦ நாட்கள் சுவாமி தினமும் பவனி வருவார். ராப்பத்து ஒன்பதாம் நாளான ஜன.,19 இரவு 7 மணிக்கு பரமபதவாசல் வழியே பெருமாள் மீண்டும் செல்வார். ஜன.,20ல் இரவு 7 மணிக்கு பரமபதவாசல் திறப்பு சாத்துமுறை, பெருமாள் ஆஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சி நடக்கும். ஜன.,21 காலை 9 மணிக்கு இயற்பா சாற்றுமுறையுடன் நிகழ்ச்சி நிறைவடையும். நித்திய பூஜை மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர் 0452- 233 8542 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தக்கார் வரதராஜன், உதவி ஆணையர் செல்வகுமாரி செய்துள்ளனர்.