பதிவு செய்த நாள்
08
ஜன
2014
11:01
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான கல்மண்டபத்தை, சிலர், ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற கோரி, இந்து அறநிலையத் துறை ஆணையர் மற்றும் கோவில் ஆணையரிடம், பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். பிரம்மோற்சவம் இதுகுறித்து நகராட்சி, 8வது வார்டு பொதுமக்கள் சார்பில், கோவில் இணை ஆணையர் புகழேந்தியிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருத்தணி நகராட்சிக்குட்பட்ட, 8வது வார்டு, மேட்டுத் தெருவில், முருகன் கோவிலுக்கு சொந்தமான கல்மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில், மாசி மாதம் பிரம்மோற்சவத்திற்கு உற்சவர் முருகப்பெருமான் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து, ஆறுமுகசுவாமி கோவிலில் அபிஷேகம் நடந்து, திரும்பும் போது, இந்த மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மீட்க வலியுறுத்தல் அப்போது, தீபாராதனை நடத்துவர். கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன், கல்மண்டபம் உள்ள பகுதியை சுற்றியும் சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டி உள்ளனர். இதனால், தற்போது, உற்சவர் பெருமான் இங்கு வருவதில்லை. எனவே, தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கல்மண்டபத்தை மீட்டு, பழைய மாதிரி உற்சவர் பெருமான் மண்டபத்தில், தீபாராதனை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.