தியாகதுருகம்: தியாகதுருகம் சீனுவாச பெருமாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனுவாசபெருமாள் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு 75 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் புதிதாக கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. பெருமாளுக்கு உகந்த நாளில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. மார்கழி மாதத்தையொட்டி தினமும் பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்து வருகிறது.நாளை(11ம் தேதி) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. அதிகாலை 3.30 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, திருமஞ்சன அலங்காரம் செய்யப்படுகிறது.சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருப்பணிக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை தலைமையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.