கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த திருமங்கலம் சிதம்பரேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது.விழாவையொட்டி காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை சிவனடியார்கள் திருவாசகத்தில் உள்ள 51 பதிக பாடல்களையும் பாடினர். இதில், சிவகாமசுந்தரி உடனமர் சிதம்பரேஸ்வரர் கோவில் மற்றும் அன்னதான அறக்கட்டளை தலைமை டிரஸ்டி அய்யாகணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.