இருக்கன்குடி: மார்கழி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, இருக்கன்குடியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் மார்கழி, தை, ஆடி ஆகிய மாதங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து, அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு, அக்னி சட்டி, மொட்டை எடுத்தல் என நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வழிபட்டனர்.