திட்டக்குடிபெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2014 01:01
திட்டக்குடி: திட்டக்குடி பகுதி பெருமாள் கோவில்களில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். வதிட்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாதபெருமாள் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணி முதல் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தது. காலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசையாக நடந்தது. ஆழ்வார்கள் மரியாதையுடன் அரங்க நாத பெருமாள் கோவில் வெளிபிரகால வலம்வரும் நிகழ்ச்சியுடன் ராப்பத்து உற்சவம் துவங்கியது. பூஜைகளை பாஞ்சராத்ர ஆகம வித்வான் வரதசிங்காச் சாரியார் சுவாமிகள் நடத்தினார். திட்டக்குடி வேதாந்தவல்லி சமேத சுகாசன பெருமாள் கோவிலில் அதிகாலை 4.30 மணி முதல் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. காலை 5.50 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடந்தது. பெருமாள் வைகுண்டநாதனாக சேவை செய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். கோவில் பட்டாச்சாரியார் ஸ்ரீதர் பட்டாச்சாரியார் பூஜைகளை செய்தார். கூத்தப்பன் குடிகாடு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தது. கோவில் பட்டாச்சாரியார் ராகவன் சுவாமிகள் பூஜைகளை செய்தார்.