பதிவு செய்த நாள்
13
ஜன
2014
11:01
கூடலூர்: சபரிமலை பொன்னம்பலமேட்டில், மகரஜோதி தரிசனம் பார்க்கும் வகையில் உள்ள கோழிக்கானம், பருந்தம்பாறை, பாஞ்சாலிமேடு பகுதிகளுக்கு, குமுளியில் இருந்து கேரள சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சபரிமலையில், மகரஜோதி தரிசனம் வரும் 14ம் தேதி நடக்கிறது. இதனைத் தொடர்ந்து, பொன்னம்பல மேட்டில் ஜோதியைப் பார்க்க ஏராளமான ஐயப்ப பக்தர்கள் செல்கின்றனர். மகரஜோதி தரிசனம் செய்ய கோழிக்கானம், பருந்தும் பாறை, பாஞ்சாலி மேடு ஆகிய இடங்களை தேர்வு செய்து, அப்பகுதிகளுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, உதவி போக்குவரத்து அலுவலர் மோகனன் அப்பகுதிகளை ஆய்வு செய்து, வரும் 14ம் தேதி அதிகாலையில் இருந்து அப்பகுதிகளுக்கு ஐயப்ப பக்தர்கள் செல்லும் வகையில், குமுளியில் இருந்து 50 சிறப்பு பஸ்கள் இயக்கபடுவதாக அறிவித்துள்ளார். அதனால், நீண்ட தொலைவில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள், மகரஜோதி தரிசனம் செய்ய, குமுளியில் இருந்து சிறப்பு பஸ்களில் செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.