பதிவு செய்த நாள்
13
ஜன
2014
12:01
ஐதராபாத்தை சேர்ந்த லட்சுமிகோபால், ரெங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்த பாவனி, விசாகப்பட்டினத்தை சேர்ந்த வெங்கட்ரமணா, மும்பையை சேர்ந்த பிரபாகர், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த புராணிக், பெங்களூரை சேர்ந்த கோவிந்தராஜ், ஸ்ரீதர்ரெட்டி, புனேயை சேர்ந்த கேரியர்கைடன்ஸ் ஆகியோர் தலா ரூ.1 லட்சத்தை காணிக்கையாக வழங்கி உள்ளனர்.அதேபோல் குண்டூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணா, புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ், ரவிக்குமார், நாகேஸ்வரரெட்டி ஆகியோர் தலா ரூ.5 லட்சம், சென்னையை சேர்ந்த சவுமியா மணிவண்ணன் ரூ.2 லட்சத்தை பல்வேறு திட்டங்களுக்கு திருப்பதி ஏழுமலையான் காணிக்கையாக வழங்கினர். இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான காணிக்கை இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.