பதிவு செய்த நாள்
15
ஜன
2014
10:01
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சிவனடியார் திருக்கூட்டத்தினர், மார்கழி மாதம் முழுவதும், அதிகாலை 5.00 மணிக்கு நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக சென்று, திருவெம்பாவை பாராயணம் செய்தனர். அதன்பின், கோவிலில் சிறப்பு வழிபாடுகள், சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்தனர். மார்கழி மாதம் முழுவதும் நடந்த வழிபாடு, நேற்று, தை முதல் தேதி பொங்கல் நாளன்று, நிறைவடைந் தது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சிவனடியார்கள், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் ரத வீதிகளில் ஊர்வலம் சென்று, திருவெம்பாவை பாராயணம் செய்தனர். கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைக்குபின், வழிபாட்டை நிறைவு செய்தனர்.