ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு சிறப்பிடம் உண்டு. நவக்கிரகங்களின் நாயகனாக தலைமை வகிப்பவர் இவரே. ஒருவரின் ஜாதகத்தில் சூரியனே தந்தையின் நிலை பற்றி தெரிவிப்பவராக (பிதுர்காரகர்) விளங்குகிறார். வேத மந்திரத்தில் உயர்ந்ததான காயத்ரி மந்திரத்திற்கு உரியவர் சூரியனே. எந்த வழிபாடு செய்கிறோமோ இல்லையோ, தினமும் நீராடியதும் கிழக்குநோக்கி நின்று சூரியநமஸ்காரம் செய்ய வேண்டியது அவசியம். கண் கண்ட தெய்வமான சூரியனை வழிபடுவோர் ஆத்மபலம் (மனோபலம்)பெறுவர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.