பொங்கலன்று காலை நேர சூரியபூஜை எவ்வளவு முக்கியமோ, அதே போல இரவு நேர பூஜையும் முக்கியம். அன்று இரவு முன்னோர்களை வழிபட வேண்டும். ஒரு தலை வாழை இலையை குத்துவிளக்கு டன் முன் விரித்து அதில் பலகாரங்கள், வெற்றிலை, பாக்கு, பழம், புத்தாடைகள் வைக்க வேண்டும். முன்னோரை மனதார வணங்கி, ஆடைகளை ஏழை எளியவர்களுக்கு வழங்க வேண்டும். நம் குடும்பத்தில் மணமாகாத கன்னிப்பெண்கள் இறந்து போயிருந்தால், அவர்களின் நினைவாக, உறவுப்பெண்களில் கஷ்டப்பட்ட பெண் ஒருவருக்கு திருமணத்திற்கான உதவியைச் செய்ய வேண்டும்.