பதிவு செய்த நாள்
15
ஜன
2014
02:01
வசீகரமாக பேசி மற்றவர்களின் மனம் கவரும் ரிஷப ராசி அன்பர்க@ள!
உங்கள் நட்புக்கிரகமான புதன் ஜன.26ல் வக்கிரம் அடைகிறார்.செவ்வாய் பிப்.4ல் வக்கிரம் அடைகிறார். ஆனால் இந்த வக்கிர காலத்தில் அதே ராசியிலே தான் இருந்தாலும், கெடுபலன் இல்லாமல், மாறாக நன்மை உண்டாகும். ஜன.16ல் சுக்கிரன் வக்கிரம் அடைந்தாலும் மாதம் முழுவதும் நன்மையளிப்பார். குரு,சனி,ராகு வழக்கம் போல் மாதம் முழுவதும் நற்பலனை வழங்குவர். புதிய முயற்சியில் வெற்றியை பெறுவீர்கள். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பண வரவு கூடும். புதன் வக்கிரம் அடைவதால் பிரச்னை குறையும். சூரியன் 9 ல் இருப்பதால் சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். வீண் விவாதங்களை குறைத்து அனைவரிடமும் அனுசரித்து போவது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் வசதி, வாய்ப்பு கூடும். ஜன.27க்கு முயற்சியில் வெற்றி கிட்டும். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். ஜன.26,27 நாட்களில் விருந்து, விழா என சென்று வருவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு குரு பலத்தால் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இருக்காது. வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். ஜன.14, 15, பிப்.5, 6,7,10,11,12 முயற்சியில் தடை நேரலாம். கலைஞர்களுக்கு பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் வந்து சேரும். பொது நல சேவகர்கள், அரசியல்வாதிகள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். மாணவர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். விவசாயிகள் சீரான மகசூல் காண்பர். பெண்கள் நல்ல வளர்ச்சி அடைவர். குடும்பத்தில் நன்மை சிறக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். உடல்நலம் சுமாராக இருக்கும். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை காட்டுவது அவசியம். நெருப்பு தொடர்பான வேலையில் கவனம் தேவை.
நல்லநாள்: ஜன.16, 17,18, 24,25,26,27,பிப்.1, 2,3,4,8,9
கவன நாள்: ஜன.28, 29
அதிர்ஷ்ட எண்: 5,6 நிறம்: நீலம், வெள்ளை
வழிபாடு: நவக்கிரத்தை வழிபடுங்கள். கேது , அர்ச்சனை செய்வதன் மூலம் தடை நீங்கும். தினமும் காலையில் சூரியனை வழிபட்டால் பிரச்னை மறையும்.