பதிவு செய்த நாள்
15
ஜன
2014
02:01
ஆர்வமும் செயலாற்றி வெற்றி காணும் மேஷராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரன் ஜன.16ல் வக்கிரம் அடைந்து நன்மை தருவார். சூரியன், செவ்வாய்,புதன் ஆகிய மூவரும் சாதகமான பலனை தர உள்ளனர். அதே நேரம் குரு,சனி,ராகு,கேது ஆகிய கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை. புதனும், சூரியனும் நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பார்கள். பெண்களால் முன்னேற்றம் காண்பீர்கள். வீட்டிற்கு தேவையான வசதி கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். பணியில் வருமானம் உயர்வால் மகிழ்ச்சி கூடும். சக ஊழியர்கள் உதவுவர். வியாபாரிகள் புதிய தொழிலை தொடங்க பெண்களின் ஆலோசனை கிடைக்கும். பெண்களால் பொருள் சேரும். செவ்வாயால் பகைவர் தொல்லை நீங்கும். சனி 7ல் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். பிப்.3, 4,8,9 ஆகிய தேதிகளில் பண விரயம் ஆகலாம். கலைஞர்கள் ஜன.16க்குப் பின் புதிய ஒப்பந்தம் பெற்று பொருளாதார வளம் காண்பர். மாணவர்கள் புதனின் அருளால்சிறப்பான பலனைக் காண்பர். நல்ல மதிப்பெண்ணும், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதால், புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். காய்கறி, பழ வகைகள் நல்ல விளைச்சலை கொடுக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். பெண்கள் மகிழ்ச்சிகரமாக இருப்பர். செவ்வாயால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். வேலைபார்க்கும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆலோசனை நல்ல முறையில் கிடைக்கும். ஜன.16,17,18ல் அக்கம் பக்கத்தாரிடம் மனக்கசப்பு உண்டாகலாம் கவனம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். ஜன.19, 20,28,29 தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.
நல்ல நாள்: ஜன.14,15, 21,22,23,30,31,பிப்.1,2,5, 6,7,10,11,12
கவன நாள்: ஜன.26,27
அதிர்ஷ்ட எண்: 2,3,9 நிறம்: சிவப்பு, பச்சை
வழிபாடு: பிப்.4 க்கு பிறகு முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள். ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை, தட்சணாமூர்த்தி வழிபாட்டைத் தொடருங்கள்.