பதிவு செய்த நாள்
15
ஜன
2014
02:01
புத்திசாலித்தனத்துடன் பணியாற்றிடும் மிதுனராசி அன்பர்களே!
கேது,புதனை தவிர மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் உள்ளன. இதனால் எந்த ஒரு செயலையும் செய்ய அதிக முயற்சி தேவைப்படும். வருமானம் ஓரளவு இருக்கும். செலவு அதிகரிக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. புதனால் புத்தாடை அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். சுக்கிரன் ஜன.16 வரை நற்பலன் அளிப்பார். சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அரசு வகையில் அனுகூலம் இல்லை.கேதுவால் காரிய அனுகூலம் ஏற்படும். ஜன.28,29ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். பொருளாதார வளம் மேம்படும். பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். செவ்வாயால் இருந்த தடைகள் பிப்.4 க்கு பிறகு மறையும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்காமல் போகாது. யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். ஜன.26,27ல் பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும். கலைஞர்களுக்கு பெண்களின் உதவி கிடைக்கும். புதிய ஒப்பந்தம் முயற்சித்தால் மட்டுமே வரும். புகழ், பாராட்டு போன்றவை கிடைக்காது. அரசியல்வாதிகள் பலன் கருதாமல் உழைக்க வேண்டியது இருக்கும். மாணவர்கள், புதன் சாதகமாக இருப்பதால் நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறாமல் போகலாம். வழக்கு விவகாரங்களில் மெத்தனம் கூடாது. பெண்கள் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். விருந்து. விழா எனசென்று வருவர். உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும். செவ்வாய் சாதகமற்ற நிலையில் இருப்பதால் நட்பில் கவனம் தேவை. உடல் நலம் பாதிக்கும். பயணத்தின் போது கவனம் தேவை.செவ்வாய் பிப்.4ல் வக்கிரம் அடைகிறார். ஆனால் அதே ராசியில் இருப்பதால், கெடுபலன் உண்டாகாது.
நல்ல நாள்: ஜன.14, 15,19,20,26,27,28,29,பிப்.3,4,5, 6,7,10,11,12
கவன நாள்: ஜன.30,31
அதிர்ஷ்ட எண்: 7,9 நிறம்: சிவப்பு, பச்சை
வழிபாடு: காலையில் சூரியனை வணங்குங்கள்.
வியாழனன்று தட்சிணாமூர்த்தியையும், அஷ்டமியன்று பைரவரையும் வணங்குங்கள்.