பதிவு செய்த நாள்
16
ஜன
2014
11:01
சேலம்: சேலம், கன்னங்குறிச்சி பகுதியில் மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சேலத்தில், போகியுடன் பொங்கல் விழா துவங்கியது. மறுநாள், கல்லூரிகளில் மாணவ, மாணவியர் பொங்கல் வைத்து கொண்டாடினர். கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சேலம், கன்னங்குறிச்சி, ஏரிக்கரையில், நேற்று மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்பகுதி விவசாயிகள், மாடுகளை குளிப்பாட்டி, அலங்காரம் செய்தனர். பின்னர் மாடு, பசுவின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, மாலை அணிவித்தனர். வயல் வெளிகளில் மாடுகளை அழைத்து சென்று, கரும்புகள் நடப்பட்டு, மண் பானையில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.