திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2014 04:01
திருச்செந்தூர்: தமிழ்க்கடவுளின் ஆறுபடை வீட்டில் இரண்டாம் வீடான திருச்செந்தூரில் தைப்பூச திருவிழாவையொட்டி லட்சக்கணக்கில் பக்தர்கள் கடற்கரையில் நீராடி சாமியை வழிபட்டனர். திருச்செந்தூரில் நடந்த தைப்பூச திருவிழாவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்வு நடந்தது. கோயிலுக்குள் சென்று வழிபட "பெரும்செலவு ஏற்படும் என்பதால், திருச்செந்தூர் கடலிலேயே தேங்காய் <உடைத்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். தைப்பூச தினத்தை முன்னிட்டு பலபகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினர்.