ஆண்கள் கோயில்களிலோ, பெரியவர்களுக்கோ நமஸ்காரம் செய்யும் போது அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். இதை அஷ்ட+அங்கம் என பிரிப்பர். அஷ்ட என்றால் எட்டு. அங்கம் என்றால் உறுப்பு.கைகள், கால்கள், மூட்டுகள், மார்பு, தலை ஆகியவை பூமியில் படும்படி செய்வதே இது. பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். முழங்கால்கள், கைகள். உச்சந்தலை மட்டும் தரையில் பட்டால் போதும். இந்த நமஸ்காரத்தை பக்திப்பூர்வமாகச் செய்தால் ஆண்களுக்கு நினைத்தது நடக்கும். பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.