இதைச் சொன்னவர் திருமூலர். திருமந்திரத்தில் இவ்வாறு சொல்லியிருக்கிறார். அதை நாம் பயன்படுத்தி வருகிறோம். சிவம் என்பது "ஜீவன் என்ற சொல்லில் இருந்து வந்தது. ஜீவர்கள் என்றால் உலக உயிர்கள். உலகத்தினர் அனைவரும் அன்புடன் இருக்க வேண்டும் என்பதால் அப்படி சொன்னார். அன்பே கடவுள் என்றும் கூட சொல்கிறார்கள். அவ்வாறு பொதுப்படையாக எடுத்துக் கொண்டால் அவரவர் வணங்கும் எல்லா தெய்வங்களும் அன்பானவர்கள் தானே!