ராசிபுரம்: புதுப்பாளையம் சாலையில் உள்ள எல்லை மாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள பாலமுருகன் சுவாமிக்கு வெள்ளிக்கிழமை தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பாலமுருகன் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.