மன்னார்குடி: ராஜ கோபால சுவாமி கோவிலில் நேற்று நடந்த ஏக சிம்மாசன உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ருக்மணி-சத்யபாமா உடன் ராஜகோபாலசுவாமி பல்லக்கில் புறப்பாடாகும் நிகழ்ச்சி நடந்தது. அதைதொடர்ந்து செங்கமலத்தாயார் சன்னதி யில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளினார். பின்னர் தாயார் சன்னதியில் செங்கமலத்தாயார், ருக்மணி, சத்ய பாமா உடன் ராஜகோபால சுவாமி ஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.