சிலபேர் அவசரப்பட்டு, அம்மா தாயே! அப்பா சிவனே! பெருமாளே! நீ மட்டும் இந்த கோரிக்கையை நிறைவேற்றி விட்டால், நான் உன் கோயிலுக்கு பசுமாடு தானமாக தருகிறேன். அல்லது ஒரு பிராமணருக்கு அதைக் கொடுத்து விடுகிறேன். கோயிலுக்கு நிலத்தை எழுதி வைக்கிறேன். தங்கம் தருகிறேன், என்றெல்லாம் நேர்ந்து விடுவார்கள். நேர்ச்சைக்குப் பிறகு, பணக்கஷ்டம் உள்ளிட்ட ஏதோ சில காரணங்களால், இவற்றைச் செய்ய முடியாமல் போய்விடும். இவ்வாறு தவிர்க்க முடியாத பட்சத்தில், மாற்று தானம் செய்யலாம் என்று வகுத்திருக்கிறார்கள் ஜைமினி, குமரிலபட்டர் என்ற தீர்க்கதரிசிகள். பசு வாங்கிக் கொடுக்க முடியாவிட்டால் அதற்குப் பதிலாக மட்டையுடன் கூடிய தேங்காய்கள், நிலம் எழுதி வைக்க முடியாவிட்டால் ஒரு சந்தனக்கட்டை, தங்கம் கொடுக்க முடியாவிட்டால், சம்பந்தப்பட்ட கோயிலுக்கு தன் உடலால் ஆன சேவை ஆகியவற்றைச் செய்யலாம். உதாரணமாக, அந்தக் கோயிலை சுத்தம் செய்வது, வரிசையை ஒழுங்குபடுத்துவது போன்றவற்றை ஏற்று செய்யலாம்.