சிருங்கேரி ஜகத்குரு அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகளைக் காண ஒரு அமைச்சர் வந்திருந்தார். அவர் நாத்திகராயினும், சுவாமிகள் மீது அபிமானம் கொண்டவர். அவர் சுவாமியிடம் பேசிக்கொண்டிருந்த போது, அறிவாளியான நம் முன்னோர்கள், அந்தக்காலத்தில் தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடு விதித்து நடந்து கொண்டதால், காவல்துறைக்கு அதிக ஆட்கள் தேவைப்படவில்லை. காரணம், கடவுள்மீது கொண்டநம்பிக்கை தான். நாங்கள் நாத்திகம் பேசி அவர்களை இழுத்தோம். ஆனால், அதுவே எங்களுக்கு வினையாகி விட்டது. இப்போது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க சிரமமாக இருக்கிறது. காரணம், கடவுள் மீதுள்ள பயம் போய் விட்டது. இதிலிருந்து, முன்னோர்கள் கடவுள் என்ற ஒன்றை உருவாக்கி, மக்கள் மத்தியில் பரப்பி, ஒழுக்கத்தைப் பேணியிருக்கிறார்கள் என நினைக்கிறேன், என்றார். நாத்திகருக்கும் கடவுள் தேவைப்படுவது இதிலிருந்து தெளிவாகிறதல்லவா! என்று முடிக்கிறார் அபிநவ வித்யா தீர்த்தர்.